Wednesday, 11 October 2017

திருநள்ளாறு

திருநள்ளாறு உருவானதற்கு இப்படி ஒரு கதை இருக்கா? தெரியாம போச்சே!

திருநள்ளாறு பற்றி அறிவோம்....!!

திருநள்ளாறு என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்று கூறுவார்கள். சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு. இந்த கோவில் சுமார் 1900 வருடம் பழமை வாய்ந்தது.

🌿 திருநள்ளாறு என்பதை திரு + நள + ஆறு என்று பிரிக்கலாம். இதில் 'நள" எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. காரைக்காலில் இருந்து சாலை வழியாக எளிதில் திருநள்ளாறை அடைய முடியும். திருச்சி, திருவாரூர் வழியாகவும் காரைக்கால் வந்து, பிறகு திருநள்ளாறை அடையலாம்.

🌿 மூன்று வருடத்திற்கு ஒரு முறை தன் இருப்பிடத்தை (ராசி) மாற்றி கொள்பவர் சனி பகவான். சனி பகவான் வீற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து தான் பல்வேறு ராசிக்காரர்களின் இன்ப துன்ப நிலைகள் கணிக்கப்படுகிறது. அப்படி சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதை சனிப்பெயர்ச்சி என்று கூறுவர். அந்தப் புண்ணிய தினத்தில், பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருநள்ளாறு வந்து பக்தியோடு வழிபட்டுச் செல்கின்றனர்.

🌿 நளச் சக்ரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் தான் திருநள்ளாறு என பெயர் பெற்றது. நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. இவர் சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார்.

🌿 பச்சைப் படிகம் எனும் கீர்த்தனை திருநள்ளாறில் இயற்றப்பட்டதால், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவ்வு+ருக்கு முக்கிய பங்கு உண்டு. திருநள்ளாறு சென்று வழிபடும் அனைவருக்கும், நல்ல பலன்களை அள்ளித் தருவார் சனி பகவான்.

திருநள்ளாறு வரலாறு :

🌟 சைவ சமய பாரம்பரியம் கொண்ட இவ்வு+ர் மக்கள், ஜெயினர்களின் வருகையால் அவர்களின் சமயத்தால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் அந்த நகரத்தை ஆண்ட ராஜாவுக்கு இத்தகைய மாற்றத்தை விரும்பாமல் அதற்கு மாறாக, அந்த நகரத்தின் பாரம்பரிய சமயமான, சைவ சமயத்தை நிறுவ விருப்பம் கொண்டிருந்தார்.

🌟 அப்போது, சைவத் துறவியான திருஞானசம்பந்தரின் சிறப்புகளைப் பற்றி அறிந்த அரசர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசரின் அழைப்பை ஏற்று அரசனைக் காண திருஞானசம்பந்தர் வந்தார்.

🌟 அங்கு வந்த திருஞானசம்பந்தர் அரசருக்கு நீண்ட காலமாக இருந்த உடல் கஷ்டங்களை தன் விசேஷ சக்திகளை கொண்டு குணமாக்கினார். திருஞானசம்பந்தர் அரசரை குணமாக்கிய விஷயம் அந்த நகரம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

🌟 அதுமட்டுமல்லாமல் திருஞானசம்பந்தர், மக்களின் துன்பங்களையும் நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருஞான சம்பந்தரின் புகழ் நகரம் முழுவதும் பரவியது. திருஞானசம்பந்தரால் ஈர்க்கப்பட்ட, மக்கள் அனைவரும் சைவ சமயத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதனைக் கண்ட ஜெயின் சமயத்தினர், சம்பந்தரை போட்டிக்கு அழைத்தனர். அதில் வெற்றி பெற்ற சம்பந்தர், அங்கு மறுபடியும் சைவ சாம்ராஜ்யத்தை நிறுவ பெரும் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக, எழுந்தது தான் திருநள்ளாறு கோவில்.

🌟 இந்த கோவில் சிவ தலமாக இருந்தாலும், சனி பகவானே மிகவும் பிரசித்தி பெற்றவராக உள்ளார். இந்த கோவிலின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, இந்த தலத்திற்கு வந்து வழிபட்டவர்களில், திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலகர்கள், அகத்தியர், அர்ஜூனன், நளன் ஆகியோர்கள் ஆவார்கள். இந்த தலத்தில் இருக்கும் விநாயகபெருமான் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் விளங்குகிறார். திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்....

Monday, 2 October 2017

பரிகாரத் தலங்கள

*பரிகாரத் தலங்கள்*





*ஆயுள் பலம் வேண்டுதல்..*

1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,

*ஆரோக்கியத்துடன் வாழ..*

1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.
3.அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

*எதிரி பயம் நீங்க..*

1.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.அ/மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அ/மிகு. காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.அ/மிகு. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.அ/மிகு. தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.அ/மிகு. பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அ/மிகு. மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.அ/மிகு. முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அ/மிகு. ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.அ/மிகு. வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி

*கடன் பிரச்சனைகள் தீர..*

1.அ/மிகு. அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.அ/மிகு. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.அ/மிகு. சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அ/மிகு. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அ/மிகு. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

*கல்வி வளம் பெருக...*

1.அ/மிகு. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.அ/மிகு. தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அ/மிகு. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

*குழந்தைப்பேறு அடைய...*

1.அ/மிகு. ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.அ/மிகு. சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.அ/மிகு. சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அ/மிகு. பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.அ/மிகு. மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அ/மிகு. முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.அ/மிகு. நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.அ/மிகு. விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

*குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க...*

1.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.அ/மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.அ/மிகு. கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.அ/மிகு. சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.அ/மிகு. நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.அ/மிகு. பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.அ/மிகு. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.அ/மிகு. மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.அ/மிகு. லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.அ/மிகு. வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.அ/மிகு. ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

*செல்வ வளம் சேர...*

1.அ/மிகு. அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.அ/மிகு. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.அ/மிகு. பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.அ/மிகு. மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

*திருமணத்தடைகள் நீங்க...*

1.அ/மிகு. உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.அ/மிகு. கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.அ/மிகு. கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.அ/மிகு. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.அ/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.அ/மிகு. நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

*தீவினைகள் அகன்றிட..*

1.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.அ/மிகு. குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.அ/மிகு. சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.அ/மிகு. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

*நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர...*

1.அ/மிகு. அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.அ/மிகு. தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.அ/மிகு. பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.அ/மிகு. வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.

*நோய், நொடிகள் தீர...*

1.அ/மிகு. இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.
2.அ/மிகு. தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.
3.அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
4.அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
7.அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

*பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண...*

1.அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2.அ/மிகு. பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3.அ/மிகு. மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

*முன்னோர் வழிபாட்டிற்கு..*

1.அ/மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.
2.அ/மிகு. மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.
3.அ/மிகு. வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4.அ/மிகு. வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.
6.அ/மிகு. ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.
7.அ/மிகு. திருப்பள்ளிமுக்கூடல். குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்
8 காசி காசி விஸ்வநாதர்
9 பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
10 அ/மிகு . சொறிமுத்து அய்யனார் கோயில்
பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்